குருகுலக் கல்வியை மீண்டும் கொண்டுவர வேண்டும்- ஆர்.எஸ்.எஸ் பொதுச்செயலர் சுரேஷ் ஜோஷி

0

கோவா மாநிலம் பனாஜி அருகே நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆர்எஸ்எஸ் பயங்கரவாத அமைப்பின் பொதுச்செயலர் சுரேஷ் ஜோஷி பேசியதாவது:

சமஸ்கிருத மொழி அனைத்துப் பள்ளிகளிலும் கற்றுத்தரப்பட வேண்டும்.  இதனை மத்திய அரசு தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். இந்தியாவை முழுமையாகப் புரிந்து கொண்டால், சமஸ்கிருதம்தான் அனைத்து மொழிகளுக்கும் தாய் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.  சமஸ்கிருதத்திற்கு உரிய அங்கீகாரத்தை அளிக்க வேண்டும். அதேபோல குருகுலக் கல்வியை மீண்டும் கொண்டுவர வேண்டும்.

பாஜகவுக்கு எதிரான எதிர்ப்பை இந்துக்களுக்கு எதிரான எதிர்ப்பாக எடுத்துக்கொள்ள கூடாது. இது ஒரு அரசியல் போராட்டம் அது தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். அதனால் அதனை இந்துக்களுடன் இணைக்கக்கூடாது.

ஆர்எஸ்எஸ் அனைவருக்கும் பதவிகளை வழங்கியுள்ளது. யார் ஆர்எஸ்எஸ்-ல் இணைய விரும்புகிறார்களோ அவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.

நாங்கள் இந்துக்கள் மீது கவனம் செலுத்துகிறோம் என்பது உண்மைதான். ஆனால், கிறிஸ்துவம், முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த ஒருவர் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்துடன் உடன்பட்டால் அவர்களும் அதில் சேர்ந்துக்கொள்ளலாம். சேர்ந்த பிறகு அவர்கள் ‘பாரத் மாதா கி ஜெய்’ என்று கூற தயங்கினால், நீங்கள் தேசத்தை உங்கள் தாயாக கருதவில்லை என்று தான் நாங்கள் கூறுவோம். அதனால், நீங்கள் இங்கே இருக்க தகுதியற்றவர்.

உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் முஸ்லீம்களும் ஆர்எஸ்எஸ்-ல் இணைந்துள்ளனர். அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ்-ல் சேர எந்த தடையும் விதிக்கப்படவில்லை, எனினும் அவர்கள் அரசியல் இயக்கங்களின் ஒரு பகுதியாக இணைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

Comments are closed.