ஹஜ் கடமைக்கான தொகையை கொரோனா நிவாரணத்திற்கு செலவிட்ட தினகூலி!

0

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அப்துர் ரஹ்மான் குட்டினாபாலி மற்றும் அவரது மனைவி இருவரும் இஸ்லாத்தின் ஐந்தாவது கடமையும் ஒவ்வொரு முஸ்லிமின் வாழ்நாள் இலட்சியமான ஹஜ் கடமையை நிறைவேற்ற பல வருடங்களாக பணம் சேர்த்து வைத்துள்ளனர்.

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக இந்த வருடம் ஹஜ் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், அப்துர் ரஹ்மான் தினகூலி வேலை செய்தும், அவரது மனைவி வீட்டில் பீடி சுருட்டும் வேலை செய்தும் பல வருடங்களாக சேமித்த பணத்தை ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொருட்கள் வாங்கி கொடுத்து வருகிறார்.

இந்த தொகையை வைத்து அடுத்த வருடம் ஹஜ் சென்றிருக்கலாம், ஆனால் சக மக்கள் பணமின்றி உணவின்றி தவிக்கும் போது நான் பணத்தை சேமித்து வைத்திருந்தால் இறைவனின் சாபம் இறங்கிவிடும் என்ற அச்சத்தினால் சேமிப்பு தொகை அனைத்தையும் பசித் தீர்க்க செலவு செய்து விட்டதாக கூறியுள்ளார்.

Comments are closed.