ஹலால் உணவுக்கு தடை கோரி இந்துத்துவ இயக்கம் மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

0

ஹலால் முறைக்கு தடைவிதிக்க கோரி அகண்ட பாரத மோர்ச்சா அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறிப்பிட்டுள்ளதாவது, இறைச்சி உணவுக்காக இஸ்லாமியர்கள் ‘ஹலால்’ முறைப்படி கோழி, ஆடு, மாடு போன்ற கால்நடைகளை கொல்கிறார்கள். இது கால்நடைகளுக்கு மிகுந்த வேதனையையும் வலியையும் ஏற்படுத்தும். ஆகவே இந்த முறையில் கால்நடைகள் கொல்லப்படுவதை தடை செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்படுள்ளது.

இந்த மனு நீதிபதி சஞ்சய் கிஷண் கவுல் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை பரிசீலித்த அவர் கூறியாவது:

இந்த மனு தாக்கல் செய்யப்பட்டதன் உண்மையான நோக்கம் என்ன? மக்களின் உணவுப் பழக்கங்களில் நீதிமன்றங்களால் தலையிட முடியாது. யார் சைவ உணவுகளை உண்ண வேண்டும், யார் அசைவ உணவுகளை உட்கொள்ள வேண்டும் என நீதிமன்றங்கள் தீர்மானிக்க முடியாது.

‘ஹலால்’ முறையில் கொல்லப்பட்ட இறைச்சியை விரும்புபவர்கள் அதனை உண்ணட்டும். ‘தட்கா’ முறையில் கொல்லப்பட்ட இறைச்சி வேண்டுபவர்கள், அதனை உட்கொள்ளட்டும். இதில் நீதிமன்றங்கள் எந்த முடிவையும் எடுக்க முடியாது. தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி கூறினார்.

Comments are closed.