குஜராத் முன்மாதிரி மாநிலம் இல்லை!

0

குஜராத்தில் மிகப் பெரிய போராட்டம் நடத்தி பாஜகவுக்கு நெருக்கடி கொடுத்த பட்டேல் இன தலைவர் ஹர்திக் பட்டேல் தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

அது சமயம் அவர், பிரதமர் மோடியும், பிஜேபி தலைவர் அமித் ஷாவும், 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெல்வதற்காக குஜாரத்தை வளர்ச்சியடைய வைத்தது போல் சித்தரித்து முன்மாதியாக பயன்படுத்தி டெல்லியை தக்கவைத்து கொண்டனர்.

ஆனால் இங்கு 55 லட்சம் இளைஞர்கள், இன்று வேலை இன்றி உள்ளனர். ஒவ்வொரு நாளும் மாநிலத்தில் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கின்றனர். ஒவ்வொரு நாளும் 400 பெண்கள் குஜராத்தில் காணாமல் போகின்றனர். ஆனால் உண்மையில் குஜராத் முன்மாதிரி மாநிலம் கிடையாது. இவைகள் அனைத்தும் அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள். ஆனால் மோடி, இன்னும்  தன்னைதானே காவல்காரன் (சௌக்கியர்) என்று கூறுகிறார்.

மக்களின் துயரங்களுக்கு தீர்வு கேட்ட  ஹர்திக் பட்டேல்-ஐ தேசவிரோதத்தை உருவாக்குவதாக கூறி அரசு குற்றம் சாட்டியது. அதன் பின் அவர் கூறியதாவது: தாய் நாட்டின் குடி மகனான என்னை,  அரசிடம் கேள்விகள் கேட்டதற்காக தேசவிரோதியாக அடையாளப்படுத்தி விட்டார்கள் என்றார்.

அதிலிருந்து தான் நான் தேசத்தின் தினசரி பிரச்சனைகள் மீது கவனம் செலுத்தினேன். மேலும்  இரண்டு கோடி வேலைகள் எங்கே உள்ளன? வங்கிக் கணக்குகளில் எத்தனை ரூபாய் கிடைத்தது? பி.ஜே.பி அரசாங்கம் வெளிநாட்டில் கடத்தப்பட்ட கறுப்பு பணத்தை திரும்ப கொண்டு வந்ததா? என்றும், பிஜேபி மக்களை அச்சுறுத்துவதற்கும், ஆட்சி செய்வதற்கும் விரும்புகிறது. ஆனால் நாம் பயப்பட கூடாது. நாம் அவர்களிடம் கேள்விகளை கேட்போம், சிங்கங்களை போல் அவர்களிடம் போரிடுவோம் “என்று அவர் கூறினார்.

Comments are closed.