பெட்ரோல் விலை உயர்வு: வழக்கம்போல் உளறி தள்ளும் பாஜக அமைச்சர்கள்

0

சாதாரண மக்கள் பேருந்தில்தான் பயணிக்கின்றனர். சிலர் மட்டுமே சொந்த வாகனத்தில் பயணிக்கின்றனர். எனவே பெட்ரோல் விலை உயர்வால் சாதாரண மக்களுக்கு பாதிப்பில்லை. மேலும் மக்களே விலை உயர்வை கண்டு பழகிவிட்டதாக பீகார் மாநில பாஜக அமைச்சர் நாராயண் பிரசாத் தெரிவித்துள்ளார்.

“பெட்ரோல் – டீசல் விலையை உயர்த்துவது சரிதான், இவ்வாறு செய்தால் மட்டும்தான் மாற்று எரிசக்தி பயன்பாட்டை நோக்கி மக்கள் செல்வார்கள்” என்று ம.பி. மாநில பாஜக அமைச்சர் விஷ்வாஸ் சரங் கூறியிருந்தார். “பெட்ரோலை மக்கள் வாங்காவிட்டால், தானாகவே விலை குறைந்து விடும்” என்றும் தெரிவித்திருந்தார்.

மோடி “பெட்ரோல் விலை உயர்வுக்குக் காரணமே முந்தைய அரசுகள்தான்” என்று காங்கிரஸ் மீது பழி போட்டார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எங்கள் கையில் எதுவும் இல்லை- மாநில அரசுகள் பார்த்து வரியை குறைத்தால் உண்டு என்று பொறுப்பின்றி பதிலளித்துள்ளார்.

இவ்வாறு பாஜக அமைச்சர்கள் பொறுப்பின்றி பதிலளத்தது விவாதப்பொருளாக மாறிய நிலையில், நாட்டில், பெட்ரோல் அப்படியொன்றும் அதிகமான விலைக்கு விற்கப்படவில்லை என்று பாஜகவை சேர்ந்த ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் பேசியுள்ளார்.

‘‘கடந்த 4-5 ஆண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 10 முதல் 15 சதவிகிதம் வரைதான் உயர்த்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் இது அதிகமே கிடையாது” என்று கூறியிருக்கும் கட்டார், “அரசு வசூலிக்கும் எந்த வரியானாலும், அது கடைசியில் மக்களுக்குத்தானே பயன்படுத்தப்படுகிறது” என்றும் உளறியுள்ளார்.

மேலும் பாஜக தலைவர்கள், ஏழை-எளிய, நடுத்தர மக்களின் துயரத்தை கொச்சைப்படுத்தும் விதத்தில் பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.