ஹரியானாவின் 60 கிராமங்களில் பாஜக தலைவர்கள் நுழைய தடை

0

மத்திய பாஜக அரசு அமல்படுத்திய புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் உள்ள 60க்கும் மேற்பட்ட கிராமங்களில், அப்பகுதி மக்கள் பாஜக கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சியான ஜன் நாயக் ஜனதா கட்சியினர் ஊருக்குள் நுழைய தடை விதித்துள்ளனர்.

புதிய வேளாண் சட்டங்களை ஆதரிக்கும் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை புறக்கணிப்போம் என்ற தீர்மானத்தை தங்களது தீர்மானமாக பஞ்சாயத்தில் இந்த கிராம மக்கள் நிறைவேற்றியுள்ளனர். கடந்த சில வாரங்களாகவே ஹரியானாவில் உள்ள பாஜக தலைவர்களை முற்றுகையிட்டு விவ்சாயிகள் போராடி வந்தனர்.

முன்னதாக ஹரியானா மாநில முதல்வர் பங்கேற்க இருந்த மாநாட்டையும் விவசாயிகள் முற்றுகையிட்டது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.