பாகிஸ்தானுக்கு போ! ஹரியானாவில் முஸ்லிம்கள் மீது கொலைவெறி தாக்குதல்

0

ஹரியானா மாநிலத்தின் குர்காவுன் நகரில் உள்ள தமாஸ்பூர் கிராமத்தில் வசித்துவந்த முஸ்லிம் குடும்பத்தினர் மீது 20க்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கிய சங்பரிவார், காவிகள் கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வீட்டின் உரிமையாளர் முஹம்மத் சாஜித், அவரது குடும்பத்தினர் மற்றும் வெளியூரிலிருந்து வந்த உறவினர்கள் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஹோலி பண்டிகையின் மாலை அன்று சாஜித்தின் வீட்டிற்கு வெளியே அவரது குடும்பத்தினர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் “பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுங்கள்” என்று கூறி பிரச்சினையில் ஈடுபட்டுள்ளனர். சாஜித் அவர்களைத் தடுக்கவே திரும்பிச் சென்றவர்கள் இன்னும் அதிகமான நபர்களுடன் வாள்கள், தடிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்து குடும்பத்தினர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினர். சாஜித்தின் குடும்பத்தைச் சார்ந்த ஒருவர் தனது மொபைல் போனில் இந்த தாக்குதல்களை பதிவு செய்துள்ளார். இக்காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளன.

அந்த கொலை வெறி தாகுதலின் வீடியோ இதோ:

தாக்குதலை நடத்திய கொலைவெறி கும்பல் வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முஸ்லிம்களுக்கு எதிரான கும்பல் தாக்குதல்கள் கடந்த ஐந்து வருடங்களாக அதிகரித்து வந்த நிலையில் தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது.

Comments are closed.