ஹரியானாவில் மஸ்ஜித் இமாமும் அவரது மனைவியும் கொடூரமாக கொலை!

0

ஹரியானாவில் பள்ளிவாசலில் (மஸ்ஜித்) தொழுகை வைக்கும் இமாம் மற்றும் அவரது மனைவி கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.

ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டம் மஜ்ரி என்ற பகுதியில் உள்ள பள்ளிவாசலில் நான்கு வருடமாக இமாமாக பணியாற்றி வருபவர் இர்ஃபான். வயது 38. இர்ஃபான் மற்றும் அவரது மனைவி யாஸ்மீன் ஆகியோர் பள்ளிவாசல் சார்பில் வழங்கப்பட்ட வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் ஞாயிற்றுகிழமை அதிகாலை தொழுகைக்கான அழைப்பொலி சொல்லப்படாததால், ஊர் பொதுமக்கள் பள்ளிவாசலுக்கு சென்று பார்த்தனர். அப்போது இமாமை அவரது வீட்டிற்கு தேடி சென்ற போது, இர்ஃபான் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் கூர்மையான ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டனர்.

முன்னதாக நில தகராறு தொடர்பான பிரச்சனையில் சனிக்கிழமை அன்று இரு தரப்பாரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் இமாமுக்கு, ஒரு தரப்பினர் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மிரட்டல் விடுத்தவர்கள் இமாமையும் அவரது மனைவியையும் கொலை செய்திருக்கக் கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் அடையாளம் தெரியாத கொலையாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

Comments are closed.