பத்திரிகையாளர் சித்திக் காப்பானுக்கு ஒரு நீதி, அர்னாபுக்கு ஒரு நீதியா?

0

அர்னாப் கோஸ்வாமி ஜாமீன் மீதான விசாரணையின்போது, அர்னாப் கோஸ்வாமியின் விடுதலையைவி, மலையாள பத்திரிகையாளர் சித்திக் காப்பானின் விடுதலைதான் மிக முக்கியமானது என்று கபில் சிபல் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மும்பையைச் சேர்ந்த கட்டிட உள்வடிவமைப்பாளர் அன்வே நாயக்கை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கடந்த நவம்பர் 4ஆம் தேதி கைது செய்யப்பட்ட ரிபப்ளிக் டிவியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு, உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இந்நிலையில் அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக மகாராஷ்ட்ர அரசு தரப்பு வழக்கறிஞராக கபில் சிபல் நடத்தி வருகிறார். தனி மனித சுதந்திரத்தை வலியுறுத்தி அர்னாப்புக்கு ஜாமீன் அளித்துள்ள உச்ச நீதிமன்றம், பத்திரிகையாளர் சித்திக்கின் வழக்கை விசாரிக்காமல் இருப்பது ஏன் என கேள்வியெழுப்பியுள்ளார்.

ஹத்ராஸ் சம்பவம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற மலையாள பத்திரிகையாளர் சித்திக் கப்பனை உ.பி.காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவருடன் செய்தி சேகரிக்க வந்த சக ஊழியர்களான அதிக் உர்-ரஹ்மான், மசூத் அகமது, ஆலம் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சித்திக் காப்பானின் லேப்டாப், மொபைல் போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் சித்திக் காப்பான் மீது தேசதுரோக வழக்கும், UAPA வழக்கும் போடப்பட்டுள்ளன. அவரது விடுதலை மீதான விசாரனை மனுவை நான்கு வாரங்களுக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. சித்திக்கின் வழக்கு விசாரிக்கப்படாமல் இருப்பதால் அவர் தொடர்ந்து சிறையில் உள்ளார். சிறையில் சித்ரவதைப்பட்டுவரும் சித்திக் காப்பானை காண குடும்பத்தாருக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

Comments are closed.