ஹலோ.. நான் அமித்ஷா பேசுறேன்! மத்திய பிரதேச ஆளுநருக்கு போன் செய்த விங் கமாண்டர்

0

இந்திய விமானப் படை விங் கமாண்டர் குல்தீப் பக்ஹேலா தற்போது டெல்லியிலுள்ள விமானப் படை தலைமையகத்தில் பணியாற்றிவருகிறார்.

மத்திய பிரதேச ஆளுநருக்கு போன் செய்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுவதுபோல பேசிய விங் கமாண்டர் குல்தீப் பக்ஹேலாபேசி சிக்கிக்கொண்டார். அவரை மத்திய பிரதேச மாநில சிறப்புப்படை கைது செய்துள்ளது.  அவருடைய நண்பரும் பல் மருத்துவருமான சந்திரேஷ் குமார் சுக்லாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தெரிவித்த மத்திய மாநில சிறப்புப் படையின் இயக்குநர் அசோக், “மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டன்டானுக்கு போன் செய்த குல்தீப், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுவதுபோல பேசி, அவரது நண்பர் சந்திரேஷ் குமார் சுக்லாவை மத்தியப் பிரதேச மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தராக நியமனம் செய்யவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அந்த உரையாடலின்போது, சந்திரேஷ் குமார் அமித்ஷாவின் உதவியாளர் போல பேசியுள்ளார். எனவே, இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Comments are closed.