பாலியல் வழக்குகளுக்கு பெயர்போன இந்துத்துவா: சிக்கிய இந்து மகாசபை தலைவர்

0

இந்து மகாசபை கட்சியின் அனைத்திந்திய தலைவரான ஸ்ரீகண்டன், அக்கட்சியின் மாநில செயலாளர் நிரஞ்சனியை பாலியல் தொல்லை செய்துள்ளார். பின்னர் அப்பெண் புகார் அளித்ததையடுத்து ஸ்ரீகண்டன் மீது சென்னை கீழ்ப்பாக்கம் காவல்நிலைய போலிஸார் வழக்குப்பதிவு செய்யதுள்ளனர்.

இந்து மகாசபை கட்சி சார்பாக அக்கட்சி தலைவரான ஸ்ரீகண்டன், டெல்லி செல்ல மொழி சிக்கல் உள்ளதால் தன்னுடன் நிரஞ்சனியை வருமாறு அழைத்துள்ளார். மேலும் இதற்கு உண்டான கமிஷன் தொகையையும், வரவு செலவுகளையும் தருவதாக தெரிவித்துள்ளார். ஆனால் இதனை நம்பி சென்ற நிரஞ்சனிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் ஸ்ரீகண்டன். மேலும் திருமண செய்ய விரும்புவதாக கூறி அப்பெண்ணை வற்புறுத்தினார்.

இதனையடுத்து நிரஞ்சனி தனது வேலையை ராஜினாமா செய்தார்.  தனது குடும்பத்தினரிடம் தன்னை பற்றி இழிவான கருத்துகளை ஸ்ரீகண்டன் பரப்பி வருகின்றார் என்று அப்பெண் புகாரில் கூறியுள்ளார்.

ஆனால், மறுபடியும் வேலையில் சேர சொல்லி அப்பெண்ணின் குடும்பத்தினரிடம் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். ஸ்ரீகண்டன் பல சட்ட விரோத செயலில் ஈடுப்பட்டு வருவதாகவும், தனது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.