பதவிக்காக சொந்த வாகனத்தை எரித்த இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் கைது

0

திருச்சி மாவட்டத்தை  சேர்ந்த சக்திவேல் என்பவர் கட்டட ஒப்பந்தரராக பணி செய்து வருகிறார். மேலும் இந்து முன்னணியின் அதவத்தூர் ஒன்றிய செயலாளராகவும் உள்ளார்.

இந்நிலையில் தனது வீட்டில் நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தை முன்புறம் நிறுத்திவிட்டு உறங்க சென்றார். நள்ளிரவில் வீட்டின் கண்ணாடி கதவுகளை கற்களைக்கொண்டு தாக்கி உடைக்கும் சப்தம் கேட்டதும் எழுந்திருக்கிறார்.

பதவிக்காக பைக் எரிப்பு நாடகம்: இந்து முன்னணி பிரமுகர் உட்பட மூவர் கைது!

அப்போது அங்கு நிறுத்தி வைக்கபட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்திவிட்டு தப்பிச்சென்றதாகவும் பைக்-ஐ முற்றிலும் எரிந்துவிட்டதாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் பணம் கொடுக்கல் வாங்கலில் சக்திவேலுக்கு நிறைய முன் விரோதம் உள்ளது என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தனிப்பட்ட விரோதமா அல்லது தொழில், அமைப்பு சார்ந்த பகையா என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணை மேற்கொண்ட காவல்துறை: சக்திவேல், தான் உள்ள இந்து முன்னணி அமைப்பில் மேற்பதவி கிடைக்கவேண்டும் என்பதற்காக வாகனத்தை எரித்து நாடகமாடியுள்ளளார். இதில் எந்த அமைப்பு சார்ந்த விரோதமும் இல்லை என தெரியவந்துள்ளது. இதையடுத்து இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் சக்திவேல் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Comments are closed.