கோவிலை பாதுகாத்த இஸ்லாமியரை விடுவிக்ககோரி இந்துக்கள் வலியுறுத்தல்

0

டெல்லி முஸ்தஃபாத் பகுதியிலுள்ள ஒரு கோவிலில் சில தினங்களுக்கு முன் தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது இரவு நேரத்தில் கோவிலுக்கு பாதுகாப்பாக நின்றுக்கொண்டிருந்த இஸ்லாமியரை காவல்துறை கைது செய்தது.

அந்த பகுதியானது முஸ்லிம்கள் அதிகம் வசிக்ககூடிய பகுதியாகும். அதனால் கோவில் மீது வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்திவிடக்கூடாது என்பதற்காக அப்பகுதியை சேர்ந்த உஸ்மான் ஷைஃபி என்பவர் பாதுகாப்பிற்காக கோவிலுக்கு வெளியே நின்றுள்ளார். ஆனால் கோவிலில் நடத்திய தாக்குதலுக்கு காரணம் இவர்தான் எனக்கூறி காவல்துறை கைது செய்துள்ளது.

இது குறித்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த கோவில் நிர்வாகம், “எங்கள் பகுதியில், இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இருவரும் ஒற்றுமையை கடைப்பிடித்து வருகிறோம். கோயிலை கவனிக்கும் பொறுப்பை உஸ்மான் ஏற்றுக்கொண்டார். ஆகையால் அவரை விடுவிக்க வேண்டும்” என மேல்முறையீடு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வன்முறையால் தயல்பூர் காவல்நிலையத்தில் உஸ்மான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் உண்மை விசாரணை வெளிவந்த பின் அவர் கைது செய்யப்பட்டதாக, துணை காவல்துறை ஆணையர் வெட் பிரகாஷ் சூர்யா தெரிவித்தார்.

Comments are closed.