இஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து: நியூசிலாந்தில் பதவியை பறிகொடுத்த இந்தியர்

0

இஸ்லாத்திற்கு எதிராக சமூக வலைதலங்களில் கருத்து தெரிவித்த இந்தியர், காந்திலால் பகபாய் படேல் என்பவரை (Wellington Justice of Peace Association) சங்கத்தின் அனைத்து பதவியகளிலிருந்தும் நீக்கம் செய்துள்ளது.

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக பாஜக மற்றும் அதன் தாய் இயக்கமான ஆர்.எஸ்.எஸ் நடத்தும் அடக்குமுறைகள் பற்றி உலக அளவில் பேசசப்பட்உ வருகிறது. சமீபத்தில் அரபு நாடுகளின் அரச பின்னணி கொண்டவர்கள் இந்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும் அரபு நாடுகளின் இந்திய தூதரகங்களும் வெறுப்பூட்டும் பேச்சு மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான பதிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

இந்நிலையில், காந்திலால் பகபாய் படேல் என்ற இந்தியர், நியூசிலாந்தின் Wellington Justice of Peace Association என்ற புகழ் பெற்ற சங்கத்தில் உறுப்பினராக இருந்துள்ளார். இவர் சமூக வலைதலங்களில் இஸ்லாமிய எதிர்ப்பு கருத்துக்களை பதிந்து வந்துள்ளார். இவரது பதிவு நீதி மற்றும் அமைதி சங்கத்தின் மேலதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது.

இதனை முழுமையாக விசாரித்த சங்க நிர்வாகிகள் படேலை அடிப்படை உறுப்பினர் உட்பட அவர் வகித்து வந்த அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கம் செய்ததோடு, இவ்விவகாரத்தை அரசின் பார்வைக்கும் கொண்டு சென்றுள்ளனர். மேலும் நீதி அமைச்சகம் அவர் மீதான நடவடிக்கை எடுக்க வேண்டி கேட்டுக் கொண்டுள்ளது.

Comments are closed.