JNU-வை தாக்கியது நாங்கள்தான்: மீண்டும் தாக்குவோம்!- ‘இந்துரக்‌ஷா தளம்’ திமிர் பேச்சு!

0

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்திற்குள் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் புகுந்து மாணவர்களை இரும்பு கம்பிகள், சுத்தியல் போன்ற கொடூர ஆயுதங்கள் மூலம் பாஜகவின் ABVP இந்துத்துவா கும்பல் கடுமையாகத் தாக்கியது.

தாக்குதல் நடந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்ட நிலையில், டெல்லி போலீசார் வன்முறை நடத்திய கும்பலை பிடிக்காமல் பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவர் ஆயிஷ் கோஷ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில் இந்த வன்முறை தாக்குதலுக்கு காரணம் நாகள்தான் என பெறுபேற்று “இந்துரக்‌ஷா தளம்’ என்ற அமைப்பு அறிவித்துள்ளது.

பிங்கி சௌத்ரி என்று அழைக்கப்படும் டோமர், இந்த தாக்குதலுக்கு அவரும் அவரது அமைப்பும் முழு பொறுப்பையும் ஏற்றுக் கொள்வதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் கூறுவதாவது:

https://www.ndtv.com/video/news/news/fringe-group-claim-of-we-did-it-for-jnu-attack-being-probed-sources-537164

“ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் தேச விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டது. அவர்கள் நம் நாட்டில் வாழ்கிறார்கள், இங்கே சாப்பிடுகிறார்கள், கல்வியைப் பெறுகிறார்கள், ஆனால் பாரதத்துக்கு எதிரான தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இதை நம்மால் சகித்துக்கொள்ள முடியாது. அதனால் தங்களது இந்து ரக்‌ஷ தள் அமைப்பை சேர்ந்தவர்கள் அங்கு தாக்குதலை நடத்தினோம். பாரத மாதாவுக்காக உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறோம். எதிர்காலத்தில் மற்றவர்கள் இதேபோன்ற தேச விரோத செயல்களில் ஈடுபட்டால், நாங்கள் மீண்டும் அந்த பல்கலைக் கழகங்களில் இதேபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வோம். இதுபோன்ற தாக்குதல்களை தொடர்ந்து நடத்துவோம்” என்று கூறியிருக்கிறார் பிங்கி சௌத்ரி.

இந்து ரக்‌ஷா தளம் என்ற இந்த அமைப்பு உத்திர பிரதேச மாநிலத்தை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கெய்சாபாத் அருகே உள்ள கௌஷாம்பியில் அமைந்துள்ள ஆம் ஆத்மி அலுவலகம் மீதான தாக்குதல் தொடர்பாக இதே பிங்கிச் சௌத்ரி கைது செய்யப்பட்டார். பின்னர் வெளியே வந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.