‘பாஜகவிடமிருந்துதான் சிவசேனா விலகியது: இந்துத்துவ கொள்கையிலிருந்து விலகவில்லை’ – உத்தவ் தாக்கரே

0

பாஜகவிடம் இருந்துதான் சிவசேனா விலகியதே தவிர, இந்துத்துவ கொள்கையிலிருந்து விலகிக்கொள்ளவில்லை’ என அயோத்தியில் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

பாஜகவின் கூட்டணியிலிருந்து வெளியேறி, என்.சி.பி கட்சியுடன் கூட்டணி வைத்து மகாராஷ்டிர முதல்வரான சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே அயோத்தியில் ராமா் கோயில் கட்ட ரூ. 1 கோடியை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்தாா்.

அயோத்தியில் செய்தியாளா்ளிடம் பேட்டியளித்த உத்தவ் தாக்க்ரே. ‘நான் பாஜகவிடம் இருந்துதான் பிரிந்துவிட்டேன், இந்துத்துவ கொள்கையிலிருந்து பின்வாங்கவில்லை. பாஜகவும், இந்துத்துவமும் ஒன்றல்ல.

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமானத்திற்கு பங்களிப்பாக எனது அறக்கட்டளையிலிருந்து ரூ.1 கோடியை நன்கொடையாக வழங்குகிறேன்.

ஒரு முதல்வராகவோ அல்லது மகாராஷ்டிர அரசு சாா்பிலோ நான் இதை வழங்கவில்லை. என்னுடைய தனிப்பட்ட பங்களிப்பாக அளிக்கிறேன். ஏனென்றால் நான் ராம பக்தன்.

மகாராஷ்டிர மக்கள் அயோத்திக்கு வரும்போது, அவா்கள் தங்குவதற்கான் ஐடம் கட்ட விரும்புகிறேன். இதுகுறித்து  உத்தர  பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்திடம் பேசினேன். இதற்காக அயோத்தியில் நிலம் வழங்குமாறு அவரிடம் கேட்டுக்கொண்டேன்.” இவ்வாறு உத்தவ் தாக்கரே  தெரிவித்தார்.

Comments are closed.