மத்திய பிரதேசத்தில் பசு குண்டர்களுக்கான புதிய அமைச்சர்கள் குழு

0

மத்திய பிரதேசத்தில் பசுக்களை பாதுகாக்க வேண்டி குண்டர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள அமைச்சா்கள் குழுவின் முதல் கூட்டம், முதல்வா் சிவராஜ் சிங் சௌஹான் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மத்திய பாஜக அரசு பசுக்களை பாதுகாக்க ஏற்கெனவே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் பல இந்துத்துவா பயங்கரவாத குழுக்களை பாஜக நாடு முழுவதும் உருவாகிக்கி வருகிறது. அந்த குழுக்களால் பல அப்பாவி இஸ்லாமியர்கள் கொடூரமாக அடித்து படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.

மத்திய பிரதேச மாநிலத்தில் பசு பாதுகாப்பு என்று போர்வையில் குண்டர்களுக்கான அமைச்சா்கள் குழு உருவாக்கப்பட்டுள்ளது. பசுக்கள் கொல்லப்படுவதை தடுப்பது இந்தக் குழுவின் முக்கியப் பணிகளாகவும்,  இக்குழுவில் மாநில கால்நடை பராமரிப்புத் துறை, வனத் துறை, உள்ளாட்சி மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை, வருவாய்த் துறை, உள்துறை, விவசாயிகள் நலத் துறை ஆகியவற்றின் அமைச்சா்கள் இடம்பெற்றுள்ளனா்.

குண்டர்களுக்கான இக்குழுவின் முதல் கூட்டம், ஞாயிற்றுக்கிழமை காணொலி மூலம் நடைபெற்றது. முதல்வா் சிவராஜ் சிங் சௌஹான் கலந்து கொண்டாா்.

இதற்கு முன்னதாக பசு மாட்டுக்காகவே தனி ஓர் அமைச்சகம் அமைக்கப்பட வேண்டும் என பாஜக அமைச்சர்களும், இந்துத்துவா கும்பலும் வலியுறுத்தியதைத் தொடர்ந்து மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் குண்டர்களுக்காக இவ்வாறு குழு அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.