ஜெய் ஸ்ரீராம் கூற சொல்லி இஸ்லாமிய முதியவர் மீது தாக்குதல் நடத்திய இந்துத்துவ பயங்கரவாதிகள்

0

ராஜஸ்தானில் இஸ்லாமியரை ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட கோரி இந்துத்துவ பயங்கரவாத கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானில் உள்ள ஜிகிரிஜோதி என்ற கிராமத்தில் 52 வயதான ஆட்டோ ஓட்டுநர் கஃபார் அகமது என்பவர், கச்சாவா என்ற பகுதியில் பயணிகளை இறக்கிவிட்டு திரும்பி வந்த போது, காரில் இருந்து வந்த இந்துத்துவ பயங்கரவாத கும்பல், அவரை தடுத்தி ஜெய் ஸ்ரீராம் மற்றும் மோடி ஜிந்தாபாத் என முழக்கமிடசொல்லி கட்டாயப்படுத்தி உள்ளனர். இதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கையில் ஆத்திரமடைந்த பயங்கரவாத கும்பல் அவரை கடுமையாக தாக்கினர்.

மேலும் ஆட்டோவை சேதப்படுத்தியும், கஃபாரின் தாடியை பிடித்து இழுத்து பாகிஸ்தானுக்கு சென்றுவிடும்படி மீண்டும் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதால் முதியவர் காஃபருக்கு கண்கள் , முகம் மற்றும் பற்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து காவல் நிலையத்தில் கஃபார் புகாரளித்தபின் ஷம்பு தயாஸ், ராஜேந்திர ஆகிய இரு பயங்கரவாதியையும் போலிஸார் கைது செய்தனர்.

Comments are closed.