கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகளை கடத்திய இந்துத்துவ கொள்ளையர்கள் கைது

0

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் ஒன்னாம்சேத்தி பகுதியை சேர்ந்தவர் செல்வம். 42 வயதான இவர் தற்போது பா.ஜ.க.வின் வேதாரண்யம் மேற்கு ஒன்றிய செயலாளராக பொறுப்பு வகிக்கிறார். இவரது நண்பர் பைரவசுந்தரம். 70 வயதான இவர் வேதாரண்யம் பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட கோவில்களில் குருக்களாக இருந்துள்ளார்.

அந்த நெருக்கத்தை பயன்படுத்திக்கொண்டு, இருவரும் பல ஆண்டுகளாக மறைமுகமாக சிலைகளை கடத்தி வந்துள்ளனர். இதனையடுத்து சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் இருவரையும் ரகசியமாக கண்காணித்து கைதுசெய்தனர்.

அவர்களிடமிருந்து ஒன்றரை அடி உயரமுள்ள சிலையையும் பறிமுதல் செய்தனர். அந்தச் சிலையின் மதிப்பு 1 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள சிலைக் கடத் தல் தடுப்புப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அபய் குமார் சிங் கூறுகையில்,”சிலைக்கடத்தலில் ஈடுபட்ட குருக்கள் பைரவசுந்தரம் மற்றும் செல்வம் ஆகியோர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பா.ஜ.க. ஒன்றிய செயலாளராக இருக்கும் செல்வம் காரைக்காலில் இருந்து மது வகைகளை கடத்திவந்து ஆள் போட்டு விற்றார். அப்போது அதே ஊரை சேர்ந்த பிராமணர் சமூகத்தை குருக்கள் பைரவசுந்தரத்தோடு நெருக்கம் ஏற்பட்டு முத்துப்பேட்டையைச் சேர்ந்த கருப்பு முருகானந்தம் வழியாக பா.ஜ.க.வில் இணைந்தார்” என்றார் டி.ஜி.பி.

Comments are closed.