CAAக்கு ஆதரவாக பேரணி என்கிற பெயரில் கலவரம் நடத்திய ஆர்.எஸ்.எஸ்-பாஜக!

0

குடியுரிமை திருத்தச் சட்டம் (சி,ஏ.ஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்) ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ஒரு மாதத்திற்கு மேலாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக, ஒருசில இடங்களில் பாஜகவினர் மற்றும் இத்துத்துவா அமைப்புகளும் பேரணி நடத்தி வருகின்றனர்.

Image result for JHARKHAND LOHARDAGA

Image result for JHARKHAND LOHARDAGA

Imageஅதைபோல குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக ஜார்கண்டின் லோகர்தாகா பகுதியில் விஷ்வ இந்து பரிஷித் அமைப்பினர் நேற்று பேரணியில் நடத்தினர். ஆனால் அப்பேரணியின் பெரும் வன்முறையாக மாறியது.

இந்த வன்முறை சம்பவத்தின் போது லோகர்தாகா பகுதியில் இருந்த வீடுகள் சூறையாடப்பட்டன. சாலையோர வாகனங்களுக்கு தீயிட்டு கொளுத்தப்பட்டது. இதனையடுத்து வன்முறையில் ஈடுபட்ட இந்துத்துவ கலவரக்காரர்களை காவல்துறை கைது செய்தனர்.

Comments are closed.