சமஸ்கிருதம் கற்றுக்கொடுக்கும் முஸ்லிம் பேராசிரியர்: எதிர்ப்பு தெரிவிக்கும் இந்துத்துவ மாணவர் அமைப்பு

0

டெல்லி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருத துறையில் உதவி பேராசிரியராக கடந்த 7ஆம் தேதி ஃபரோஸ் கான் என்பவர் நியமிக்கப்பட்டார். இதற்கு கல்லூரி மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஃபரோஸ் கான் நியமனத்தை ரத்து செய்யக்கோரி இந்து அமைப்புகளை சேர்ந்த மாணவர் அமைப்பினர், துணைவேந்தர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஊடுபட்டுள்ள இந்து அமைப்பு மாணவர் கிருஷ்ணகுமார் கூறுகையில்: எங்கள் கலாச்சாரம், உணர்வுகளுடன் தொடர்பில்லாத நபர் எப்படி எங்களை புரிந்து கொண்டு எங்களின் சிந்தனைகளை உணர்வார்? என்றார். மேலும் இதுகுறித்து இந்து அமைப்பைச் சேர்ந்த மாணவர் சஷிகாந்த் கூறுகையில், “நான் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இருந்தேன். மற்றும் பலர் ஏபிவிபி அமைப்பை சேர்ந்தவர்கள்” என்றார்.

பல்கலைக்கழகத்தின் மற்ற பேராசிரியர்களும், ஃபரோஸ் கானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்று கூறி இருக்கின்றனர்.

இது குறித்து ஃபரோஸ் கான் கூறியதாவது: “நான் சமஸ்கிருதம் கற்றுக் கொண்டேன். ஆனால் எந்த தருணத்திலும் தான் ஒரு இஸ்லாமியர் என உணர்ந்ததில்லை. அதை நான் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று முயற்சிக்கும் போது விவாதமாகிவிடுகிறது” என்றார்.

ஃபரோஸ் கான், சமஸ்கிருதத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். 2018ஆம் ஆண்டு ஜெய்பூரில் உள்ள நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் பிஹச்டி பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.