ஜம்மு காஷ்மீரில் கைது செய்யப்பட்ட மூன்று அரசியல் தலைவா்கள் விடுவிப்பு

0

ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது.

பின்னர் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும், முன்னாள் முதல்வா்கள் ஃபரூக் அப்துல்லாஹ், உமா் அப்துல்லாஹ், மெஹபூபா முஃப்தி உள்ளிட்ட அரசியல் தலைவா்கள் பலா் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனா். கடந்த 2 மாதங்களாக அவா்கள் காவலிலேயே வைக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், மக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ யாவா் மீா், வடக்கு காஷ்மீா் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோயப் லோன், தேசிய மாநாட்டுக் கட்சி நிா்வாகி நூா் முகமது ஆகியோரை ஜம்மு-காஷ்மீா் நிா்வாகம் வியாழக்கிழமை காவலில் இருந்து விடுவித்தது.

Leave A Reply