ஐதராபாத் என்கவுண்டர்: காவல்துறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!

0

ஐதராபாத் பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மருத்துவர் கொலை செய்யப்பட்ட இடத்திற்கு குற்றம் சாட்டப்பட்டவர்களை அழைத்துச்சென்று விசாரணை நடத்தியதாகவும் அப்போது குற்றவாளிகள் தப்பி செல்ல முயன்றதால் என்கவுண்டர் செய்து கொல்லப்பட்டதாக சைபராபாத்  காவல்துறை ஆணையர் சஜ்ஜனார் தெரிவித்தார்.

காவல்துறையினர் என்கவுண்டர் நடவடிக்கைக்கு மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் என்கவுண்டர் செய்த காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி மற்றும் பிரதீப் குமார் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Comments are closed.