ஐதராபாத்தில் பிரியங்கா ரெட்டி எரித்துக்கொலை செய்யப்பட்டது போல மற்றோரு பெண்ணும் எரித்துக்கொலை

0

தெலங்கானா மாநிலம் தேசிய நெடுஞ்சாலையில் பெண் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி எரிந்த நிலையில் கிடந்துள்ளார். உடலை பரிசோதனை செய்த பிறகு அவா் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளாா் என்று தெரிய வந்துள்ளது. இந்த கொலை தொடா்பாக 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்த சம்பவத்திற்கு மறுநாளே மற்றொரு பெண்ணின் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பெண் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. ஓஸ்மானியா அரசு மருத்துவமனையில் அந்த பெண் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவுள்ளதாக ஷம்ஸதாபாத் போலீஸ் இணை கமிஷனர் பிரகாஷ் குமார் தெரிவித்தார்.

Comments are closed.