பாகிஸ்தான் ஏவுகணையென நினைத்து சொந்த விமானத்தையே சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்

0

பிப்ரவரி மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பறந்த இந்திய நாட்டுக்குச் சொந்தமான Mi-17 V5 ஹெலிகாப்டரை, தவறுதலாக சுட்டு வீழ்த்தியது இந்திய விமானப் படை.

தற்போது அது குறித்து தெரிவித்த இந்திய விமானப் படையின் தளபதி ராகேஷ் குமார், ‘அப்போது செய்தது மிகப் பெரிய தவறு. அந்த தாக்குதலால் 6 விமானப் படை வீரர்கள் மற்றும் பொது மக்களில் ஒருவர் பலியாகினர். நாங்கள் செலுத்திய ஏவுகணை, ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியது. அந்த சம்பவத்தைத் தொடர்ந்து, துறை ரீதியில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 2 அதிகாரிகள் மீது இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

பிப்ரவரி மாதம் ஜம்மூ காஷ்மிரின் புட்காம் பகுதியில் பறந்து கொண்டிருந்த, Mi-17 V5 ரக ஹெலிகாப்டரை இந்திய விமானப்படை, தவறுதலாக சுட்டு வீழ்த்தியது. பதற்றமான சூழலில் ஹெலிகாப்டர் வந்ததால், அதை ஏவுகணை என்று தவறுதலாக புரிந்து கொண்ட விமானப் படை அதிகாரிகள், அதை நோக்கி ஏவுகணையைச் செலுத்தினார்கள். அது ஹெலிகாப்டரைத் தாக்கியது. இதனால், வானில் தீப்பிடித்த ஹெலிகாப்ட்டர் கீழே சிதறியது’ என தெரிவித்தார்,

Comments are closed.