IAS அதிகாரி மகள் வர்ணிகா கடத்தல் முயற்சி வழக்கு: வர்ணிகாவின் தந்தைக்கு பணியிடமாற்ற உத்தரவு

0

IAS அதிகாரியின் மகள் வர்ணிகாவை ஹரியானா பாஜக தலைவர் சுபாஷ் பரலாவின் மகன் விகாஸ் பரலா அவரது நண்பருடன் சேர்ந்து கடத்த முயற்சித்தார்.  (பார்க்க செய்தி)

இந்த வழக்கில் விகாஸ் பரலா கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவரும் நிலையில் வர்ணிகா குந்துவின் தந்தையான IAS அதிகாரி விரேந்தர் குந்து பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக மாநில சுற்றுலாத்துறையை கவனித்து வந்த அவர் தற்போது அறிவியல் மற்றும் தொழிநுட்பத்துறையில் கூடுதல் தலைமை செயலாளராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இவரின் இந்த பணியிடமாற்றம் குறித்து பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பிய போது, ”நான் என் திறனுக்கு ஏற்ப எங்கு பணியாற்ற வேண்டும் என்பது அரசின் விருப்பம். இதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நான் என்னுடைய பணியிடமாற்ற உத்தரவை தவிர்க்க எந்த முயர்ச்சியும் மேற்கொள்ளவில்லை.” என்று அவர் கூறியுள்ளார். இந்த பணியிடமாற்ற நடவடிக்கை விகாஸ் பரலாவின் பிணை மனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விரேந்தர் குந்துவின் பணியியாமாற்ற அறிக்கையில் அதற்கான் காரணம் என்று அரசு எதையும் குறிப்பிடவில்லை. முன்னதாக விரேந்தர் குந்து வகித்த சுற்றுலாத்துறையின் கூடுதல் தலைமை செயலர் பதவிக்கு விஜய் வரதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Comments are closed.