ஐ.ஏ.ஸ் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த பாஜக அரசு!

0

பணியில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள், தங்கள் பெயரில் உள்ள அசையாச் சொத்துகள், அடமானத்தின் பேரிலோ அவா்கள் வசம் உள்ள அசையாச் சொத்துகள், அவருக்குச் சொந்தமாக அவரது குடும்ப உறுப்பினா் பெயரிலோ, மற்ற நபா்களின் பெயரிலோ இருக்கும் அசையாச் சொத்துகள் குறித்த விவரங்களை சமா்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு அனைத்து அமைச்சகங்களுக்கும், அரசு துறைகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

இதன் விவரங்களை அடுத்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். தகுந்த காரணம் இல்லாமல் மேற்கூறிய விவரங்களை சமா்ப்பிக்கத் தவறும் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பணியாளா் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்னும் 444 ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களது அசையாச் சொத்து தொடா்பான விவரங்களை தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. நாடு முழுவதுமாக பல்வேறு துறைகளில் 6,699 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 5,205 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியில் உள்ளனா்.

Comments are closed.