இந்திய ஜனநாயகத்திற்கு ஆபத்து: தொடரும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் ராஜினாமா!

1

தற்போது கர்நாடகாவில் பணியாற்றும் தமிழகத்தை சேர்ந்த சசிகாந்த் செந்தில் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

2009 முதல் 2012 ஆம் ஆண்டுவரை பெல்லாரி மாவட்ட உதவி ஆட்சியராகவும், பின்னா், சிவமக்கா மாவட்ட ஊராட்சி தலைமை செயல் அதிகாரியாக 2 முறையும், அதன்பிறகு சித்ரதுா்கா, ராய்ச்சூரு மாவட்டங்களின் ஆட்சியராகவும், 2016 ஆம் ஆண்டில் சுரங்கம் மற்றும் நில அமைப்பியல் துறையின் இயக்குநராக பணியாற்றியிருந்த நிலையில், 2017 ஆம் ஆண்டு மாவட்டத்தின் ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் நேற்று ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ஜனநாயகம் சமரசத்திற்கு உள்ளாக்கப்படுகிறது எனக் கூறி அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள ராஜினாமா கடிதத்தில், “பன்முகத் தன்மை கொண்ட ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பு முறையில்லாமல் சமரசத்திற்கு உள்ளாக்கப்படும்போது அதில் சிவில் சர்வீஸ் ஊழியராக தொடர்வது நியாயமற்றது” என கூறியுள்ளார்.

முன்னதாக காஷ்மீர் மக்களுக்காக குரல் கொடுக்கும் விதமாக ஐ.ஏ.எஸ் அதிகாரி கண்ணன் பதவி விலகிய நிலையில் தற்போது மற்றொருவரும் பதவி விலகியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Discussion1 Comment