ஐ.சி.யூ.வில் வைத்து பெண்ணை கூட்டு பாலியல் செய்த மருத்துவ ஊழியர்கள்

0

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் மருத்துவமனையில் ஒரு பெண் மூச்சித்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் அப்பெண்ணை கூட்டு பாலியல் செய்துள்ளனர் என்று விசாரணையில் தெரியப்பட்டுள்ளதாக போலீஸார் கூறியுள்ளனர்.

அந்த பெண் சுவாச பிரச்சனை காரணமாக ஞாயிற்றுக்கிழமை அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்குள்ள ஊழியர்கள் அவரை கூட்டு பாலியல் செய்துள்ளனர் என “மூத்த அதிகாரி ஹரிமோகன் சிங் ANI செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் என்று பெண் கணவர் குற்றம் சாட்டினார், அப்பெண்ணுக்கு ஒரு மயக்க ஊசி கொடுக்கப்பட்டு, தூங்க வைத்துள்ளனர். அதன் பிறகு அந்த பெண்ணை ஐ.சி.யு.வில் வைத்து மூன்று மருத்துவ ஊழியர்கள் கும்பலாக கற்பழித்துள்ளனர்.

இந்த சம்பவத்தின் போது ​​ஐ.சி.யு.யின் சி.சி.டி.வி கேமராக்கள் ஆஃப் செய்யப்பட்டுள்ளது என்று இவ்வழக்கின் விசாரணை அதிகாரி தெரிவித்தார்.

இதன் தொடர்பாக, சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், வழக்கு தொடர்பாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் குறியுள்ளனர்.

Comments are closed.