IFF இன் ஹஜ் சேவைப்பணி

0

1.8 மில்லயன் ஹாஜிகள் பங்கு பெற்ற இவ்வாருட ஹஜ் பயணத்தில் ஹாஜிகளுக்கு மற்ற வருடங்களைப் போன்று இந்த வருடமும் தமது சேவையை வழங்கினர் இந்தியா ஃபிரட்டர்னிடி ஃபோரம்,  அமைப்பினர்.

அரஃபா மற்றும் மினாவில் உள்ள ரயில்நிலையங்கள் தொடங்கி அனைத்து இடங்களிலும் ஹாஜிகளுக்கு உதவும் வகையில் தமது தொண்டர்களை களம் இறக்கியிருந்தது IFF. ஹாஜிகள் அரஃபா  செல்லும் முன்னரே அங்கு தொண்டர்கள் இருக்க வேண்டிய முக்கியத்துவத்தை உணர்ந்து துல்ஹஜ்  8ஆம் இரவு 10 மணி முதல் ஹாஜிகளை மினாவில் இருந்து அரஃபா ரயில் ஏற்றி விடுவதிலும் அவர்களை அரஃபாதில் உள்ள அவர்களது இடங்களுக்கு வழிகாட்டுவதிலும், வயதான மற்றும் பலகீனமான ஹாஜிகளை சக்கர நாற்காலிகளில் அழைத்துச்செல்லும் பணிகளிலும், நோயுற்றவர்களை மருத்துவமனையில் சேர்க்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தனர் IFF தொண்டர்கள்.

இன்னும் வெயிலை தணிக்கும் வகையில் ஹாஜிகளுக்கு வழங்கப்பட்ட குடை, செருப்பு போன்றவை ஹாஜிகளுக்கு பெரும் உதவியாக இருந்தது. இந்திய ஹஜ் மிஷன் வழங்கிய வரைபடங்கள் ஹாஜிகளை வழிகாட்டும் தொண்டர்களுக்கு பெரும் உதவியாக இருந்தது. இன்னும் ஹாஜிகளுக்கு உதவும் வகையில் மீனா டென்ட் லோகேடர் என்ற செயலியையும் IFF அறிமுகம் செய்திருந்தது.

அரஃபாதில் ஹாஜிகளுக்கு சேவை செய்யும் பணிகளை IFF ஜித்தா பகுதி தலைவர் சம்ஷுதீன் மலப்புரம் அவர்களும், மக்கா ஒருங்கிணைப்பாளர் கலீல் செம்பையில் அவர்களும், பொறியாளர் முதஸ்சிர், அலி பி.கே., அப்துல் கஃபார் ஆகியோர் மேற்பார்வையிட்டு வழி நடத்தினர்.

Comments are closed.