ரியாத் IFF நடத்திய “ஹுப்புன் நபி” நிகழ்ச்சி!

0
ரியாத்: கடந்த 16-01-2015 வெள்ளிக்கிழமை மாலை 8 மணியளவில் இந்தியா ஃபிரேட்டர்னிடி ஃபாரம் ரியாத் மண்டல பத்ஹா கிளை “‎ஹுப்புன்‬ நபி” (பிரியத்திற்குரிய நபிகள் நாயகம் (ஸல்)) என்னும் தலைப்பில் பொதுக்கூட்டம் ஒன்றை ஷிபா அல் ஜஸீரா ஆடிட்டோரியத்தில் நடத்தியது.

நிகழ்ச்சியை ஹாஃபிழ் J.M. நைனா முஹம்மது அவர்கள் குர்ஆன் வசனங்கள் ஓதி துவக்கி வைத்தார். பத்ஹா கிளை செயலாளர் M. ஹபீப் வரவேற்புரை நிகழ்த்த, ரியாத் மண்டல தலைவர் M. முஹம்மது ராஃபி அவர்கள் தலைமை தாங்கி இந்தியா ஃபிரேட்டர்னிடி ஃபாரம் வளைகுடா நாட்டில் ஆற்றி வரும் பணிகள் குறித்து உரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து IFFன் ரியாத் மண்டல பேச்சாளர் கம்பம் M. அபூதாஹிர் அவர்கள் நம் உயிரினும் மேலான இறுதித் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய வரலாற்றையும், அவர்களுடைய தியாகத்தையும், அவர்களின் வாழ்க்கை முறை மனித சமுதாயதிற்கு அழகிய வழிகாட்டி என்பதையும் அழகிய முறையில் ஒப்பிட்டு சிறப்பாக உரையாற்றினார்.

2
இறுதியாக மல்லிப்பட்டினம் J. முஹம்மது ரஃபீக் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சியினை IFFன் பத்ஹா கிளை தலைவர் M. முஹைதீன் பாதுஷா தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக ISF ரியாத் மண்டல தமிழ் மாநிலக் கமிட்டி பொதுச் செயலாளர் சர்தார் அவர்களும், IFF மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜாகிர் ஹுசைன் அவர்களும் கலந்து கொண்டார்கள். திரளான மக்கள் கலந்து கொண்டு உத்தம நபியின் வாழ்க்கை முறையை தமது வாழ்வியல் நடைமுறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் எனும் எண்ணத்தோடு பிரிந்து சென்றார்கள். இறைவன் அருளாளல் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
3

தமிழகத்தின் தலைசிறந்த பதிப்பகங்களில் ஒன்றான இலக்கியச்சோலையின் புத்தகங்களும், விடியல் வெள்ளி, புதிய பாதை பத்திரிகைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

அபூ ஃபஹீம்

Comments are closed.