IIT மாணவர் அடித்துக் கொலை:மற்றொரு உயிரை காவு வாங்கிய பசு காவலர்கள்

0

மேற்கு வங்கத்தின் ஹரிந்தங்கா கிராமத்தை சேர்ந்தவர் 24 வயது கவ்ஷிக் புர்கைத். இவர் IIT இல் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். கடந்த திங்கள் கிழமை தனது அத்தை வீட்டிற்கு காலி பூஜை கொண்டாட சென்ற இவரை ஒரு கும்பல் வழிமறித்தது.

கவ்ஷிக்கை கால்நடை கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்று நினைத்த அவர்கள் அவரை டைமண்ட் கிளப் என்ற இடத்திற்கு இழுத்துச் சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர். அவர் யாரையும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும் அனுமதிக்கப்படவில்லை. விஷயம் தெரிந்த கவ்ஷிக்கின் உறவினர்கள் டைமண்ட் கிளப்பிற்கு செல்லவே கவ்ஷிக்கை விடுவிக்க அவர்களிடம் இருந்து ஒன்னரை லட்சம் ரூபாய் கேட்டிருக்கிறார்கள். அந்த பணத்தை கொடுத்தால் தான் கவ்ஷிகை மருத்துவமனை எடுத்துச் செல்லக்கூட அனுமதிப்போம் என்று கூறியுள்ளனர்.

இன்னும் கவ்ஷிக்கின் குடும்பத்திடம் அவர்கள் 70,000 ரூபாயை அப்பொழுதே தர வேண்டும் என்றும் இல்லையென்றால் பின்னர் ஒன்னரை லட்சம் ரூபாய் தருவார்கள் என்று எழுத்து மூலமாக தரவேண்டும் என்று  கூறியுள்ளனர். எப்படியோ கவ்ஷிக்கை அவர்களிடம் இருந்து காப்பாற்றி மருத்துவமனை அழைத்து சென்றும் அங்கே சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை திரினாமுல் காங்கிரஸ் கிராம பஞ்சாயத் உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட 10 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Comments are closed.