இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் இனி முயற்சிக்காது: இம்ரான் கான்!

0

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் இனி முயற்சி செய்யப்போவது இல்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், காஷ்மீர் விவகாரத்தால், இந்தியா- பாகிஸ்தான் இடையே ராணுவ ரீதியிலான பதற்றம் அதிகரித்துள்லதாக தெரிவித்துள்ளார். மேலும், கடந்த காலங்களில் இந்தியாவுடன் அமைதிப் பேச்சு நடத்த பாகிஸ்தான் முயற்சி செய்த போதெல்லாம், இந்தியா அதனை புறக்கணித்ததாகவும், யாரையோ திருப்திப்படுத்த இதனை அவர்கள் செய்திருக்கலாம் என தாம் நினப்பதாக இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் இனிமேல் முயற்சி மேற்கொள்ள போவதில்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்டதற்கு, கடும் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், வர்த்தக உறவு, ரயில் போக்குவரத்து, விமான வான்வழி பாதை தடை, இந்திய படங்களுக்கும் பாகிஸ்தானில் திரையிட தடை போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டது எந்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.