காஷ்மீரிகளின் போராட்டத்தை ‘இஸ்லாமிய பயங்கரவாதம்’ என முத்திரை குத்திய இந்தியா- இம்ரான் கான்

0

கஷ்மீரிகளின் சுதந்திரப் போராட்டத்தை ‘இஸ்லாமிய பயங்கரவாதம்’ என்று இந்தியா முத்திரை குத்தியதாக இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இம்ரான் கான் தனது டுவிட்டர் பதிவில், “கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக இந்தியா ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள காஷ்மீர் மக்கள் அனுபவித்து வரும் வேதனையை நான் புரிந்து கொண்டுள்ளேன். ஆனால் காஷ்மீர் மக்களுக்கு உதவுவதற்கோ அல்லது ஆதரவு அளிப்பதற்கோ மனிதநேயத்துடன் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை கடந்து சென்றால், அதற்கு இந்தியா ஒரு கதை சொல்லி, தனது கைகளில் எடுத்து விளையாடுகிறது.

இந்தியாவின் காட்டுமிராண்டிதனமான ஆக்கிரமிப்பை திசை திருப்பவே பூர்வீக கஷ்மீரிகளின் போராட்டத்தை பாகிஸ்தானால் நடத்தப்படும் இஸ்லாமிய பயங்கரவாதம் என முத்திரை குத்த இந்தியா முயல்கிறது. இதை எல்லை தாண்டி வந்து தாக்குதவதற்கும் ஒரு காரணமாக சொல்ல இந்தியா பயன்படுத்துகிறது” என இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply