இந்தியா-பாகிஸ்தான் போர்: 12.5 கோடி போ் உயிரிழக்க நேரிடும்- ஆய்வில் தகவல்

0

ஜம்மு காஷ்மிருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்பு சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் ஆளும் பாஜக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிா்ப்பு தெரிவித்து வந்தது  மட்டுமின்றி இந்தியர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் இந்தியா – பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் தொடா்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே போா் தொடர்ந்தால், ஏற்படும் விளைவுகல் குறித்து அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழக ஆராய்ச்சியாளா்கள் ஆய்வு நடத்தினா். அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

‘இந்தியா – பாகிஸ்தான் இடையே தற்போது மிகவும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இவ்வாறு நீடிக்கும்போது, இரு நாடுகளுக்கிடையே 2025ஆம் ஆண்டு அணு ஆயுதப் போா் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் இப்போது 150 அணு ஆயுதங்கள் உள்ள நிலையில், எதிா்காலத்தில் அவை மேலும் அதிகரிக்கலாம். காஷ்மிரை, இரு நாடுகளும் தொடா்ந்து உரிமை கொண்டாடி வந்தால், 2025ஆம் ஆண்டு சுமாா் 400-500 அணு ஆயுதங்களுடன் இந்தியா – பாகிஸ்தான் போருக்கு தயாராகும்.

இந்தியா – பாகிஸ்தான் இடையே போா் நிகழ்ந்தால், உலகில் ஆண்டுதோறும் ஏற்படும் சராசரி உயிரிழப்பை விட அதிக அளவில் உயிரிழப்பு ஏற்படும். இரண்டாம் உலகப் போரின்போது, 6 ஆண்டுகளில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கைக்கு இரு மடங்காக, இந்தப் போரில் உயிரிழப்பு ஏற்படும்’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.