பணத்திற்காக இந்தியாவின் தவறை தட்டி கேட்காமல் இருக்க முடியாது- மலேசிய பிரதமர் மஹாதிர்

0

குடியுரிமை திருத்த சட்டம், காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை ரத்து ஆகிய நடவடிக்கைக்காக இந்திய அரசுக்கு மலேசிய பிரதமர் மஹாதிர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் மலேசியாவின் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதிக்கு இந்திய அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்தது. மத்திய பாஜக அரசின் அடக்குமுறை சட்டத்திற்கு எதிராக மலேசியா கருத்து தெரிவித்ததால், இத்தகைய நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பதிலளித்த மஹாதிர், ”இந்தியாவிற்கு அதிக பாமாயில் விற்க்கப்படுகிறது. இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் குறித்த கவலை எங்களுக்கு உள்ளது. ஆனால், அதே நேரம் எங்கு தவறு நடந்தாலும் வெளிப்படையாக அதை சுட்டிக்காட்டவேண்டும். அதை நாங்கள் தொடந்து செய்வோம். பணத்திற்காக தொடர்ந்து நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்ட தவறிவிட்டால், பல தவறுகள் அரங்கேறும்” என்று கூறினார்.

Comments are closed.