சிறுகுறு தொழில்களை மோடி அரசு அழித்து வருகிறது -ராகுல் காந்தி

0

நாட்டில் 90 சதவீதம் பேருக்கு வேலைவாய்ப்பை அளித்து வரும் சிறுகுறு தொழில்களை மோடியின் பாஜக அரசு அழித்து வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியாவின் பொருளாதாரம் குறித்து ராகுல் காந்தி நேற்று வெளியிட்ட விடயோவில், ‘சிறு வியாபாரிகள், விவசாயிகள், ஏழைளின் சிறு குறு தொழில்கள் முடங்கி, ஏராளமான பணத்தை அபகரித்து அடிமைகளாக்க மத்திய பாஜக அரசு முயன்று வருகிறது.

அதற்காகதான் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, தவறான ஜிஎஸ்டி, பொது முடக்கம் ஆகியவற்றை பாஜக அரசு கொண்டு வந்தது.

2008-ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி கூழல் ஏற்பட்டது. அமெரிக்கா, ஐரோபா நாடுகளில் வங்கிகள் திவாலாகின. ஆனால் இந்தியா பாதிக்கப்படவில்லை. அப்போது முன்னாள் பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கிடம் நான் கேட்டபோது, ‘இந்தியாவின் விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் அடங்கிய சிறுகுறு தொழில்கள்தான் இதற்கு காரணம் என அவர் பதிலளித்தார். அமிதுறையினர் வலுவாக இருக்கும் வரை இந்தியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்படாது என மன்மோகன் சிங் பதிலளித்தார்’.

இதை எதிர்த்து நாட்டில் உள்ள அனைவரும் ஒனறுணைந்து போராட வேண்டும் என்றும் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டார்.

Comments are closed.