பொது அறிவு இல்லாததுபோல் பேசும் யோகி ஆதித்யநாத் -டி.கே. சிவகுமார்

0

உத்தர பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வேறு மாநிலங்களுக்கு வேலைக்கு சென்றால், அதற்கு மாநில அரசிடம் அனுமதி பெறவேண்டும் என்று பாஜகவை சேர்ந்த அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருந்தார்.


இதற்கு உத்தர பிரதேச தொழிலாளர்களை, வெளிமாநிலங்கள் வேலைக்கு அமர்த்துவதை யாரும் தடுக்க முடியாது என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.

“உத்தர பிரதேச மக்கள் வெளிமாநிலங்களுக்கு செல்ல ஆதித்யநாத்தின் அனுமதி தேவை இல்லை. தொழிலாளர்கள் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் வேலை செய்ய உரிமை உள்ளது. ஜனநாயகத்தில் ஆட்சி செய்வதற்கான அடிப்படை விதிகள் கூட யோகி ஆதித்யநாதிற்கு தெரியவில்லை. பொது அறிவு இல்லாதவர்கள் தான் இப்படி பேசுவார்கள். அவரின் இந்த பேச்சால் அம்மாநில தொழிலாளர்கள் தான் பாதிகப்படுவார்கள்.

பாஜகவுக்கு எது வசதியோ, அப்போது ஒரே நாடு என்றும் இந்தியா பல்வேறு மாநிலங்களையும், பல்வேறு மக்களையும் கொண்டுள்ளதாக பொய் கருத்துகளை தெரிவிக்கிறார்கள்” எனவும் சிவகுமார் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.