ஊரடங்கு: குஜராத்திலிருந்து சொந்த ஊருக்கு செல்ல முடியாததால் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்: 80 பேர் கைது

0

உலகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. அதில் இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த கடந்த 24-ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த திடீர் அறிவிப்பினால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர்.

ஊரடங்கு காரணமாக வாங்கனங்களின்றி சொந்த ஊருக்கு செல்ல முடியாத பலரும் நெடுஞ்சாலைகளில் நடந்தே சென்றனர். மேலும் பல தொழிலாளர்கள் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

குஜராத்தில் உள்ள சூரத் நகரில் சிக்கிக்கொண்ட ஒடிசாவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் நேற்று முன்தினம் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் தொழிலாளர்கள் 80 பேரைக் கைது செய்து காவலில் வைத்துள்ளதாக, காவல் உதவி ஆணையர் கே. பட்டேல் தெரித்தார்.

இதுகுறித்து தெரிவித்த அவர், “மார்ச் 30ம் தேதி அன்று நடைபெற்ற இதேபோன்ற ஒரு சம்பவத்தில், சூரத் நகரில் 90க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடு தழுவிய ஊரடங்கை மீறி, இதேபோன்ற ஆர்பாட்டம் நடத்தியதற்காக கைது செய்துள்ளோம்”

இவ்வாறு காவல் உதவி ஆணையர் தெரிவித்தார்.

இதுபோன்று சிக்கி தவித்து வரும் தொழிலாளர்களை பாதுகாக்க முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் கோரிக்கை எழுந்து வருகிறது.

Comments are closed.