மரணங்களைவிட நாடகம் பெரிதா? -மோடியைக் கடுமையாக விமர்சித்த ஜிக்னேஷ் மேவானி

0

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதாக கூறி இருமுறை தீர்வில்லாமல் உரையாற்றிய மோடி, நேற்று வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டார்.

அதில் மோடி பேசுகையில், “ஏப்ரல் 5ம் தேதி இரவு 9 மணிக்கு வீட்டில் உள்ள மின்சார விளக்குகளை அணைத்துவிட்டு 9 நிமிடங்கள், அகல் விளக்குகள், மொபைல் டார்ச் லைட், மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும். அப்போது நாட்டு மக்கள் பற்றி அனைவரும் சிந்திக்க வேண்டும்.” என கூறியிருந்தார்.

மோடியின் இதுபோன்ற சம்மந்தமில்லாத அறிவிப்புகளால் கொரோனா வைரஸஸை எதிர்கொள்ள முடியாது என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் குஜராத் மாநில எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானியும், மோடியை விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஜிக்னேஷ் மேவானி, “இந்தியாவில் உள்ள 33.5 கோடி குடும்பங்கள், ஒரு விளக்கு அல்லது மெழுகுவர்த்தி வாங்க 670 கோடி ரூபாய் செலவாகும். அதன் மாறாக நரேந்திர மோடி, சுகாதாரத் துறை ஊழியர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க உடனடியாக 670 கோடி ரூபாயை ஒதுக்க வேண்டும்.

உலகளவில் தட்டுப்பாடாக இருக்கும் முகக் கவசங்கள் பற்றியும், மருத்துவ உபகரணங்கள் பற்றியும், நிவாரண உதவிகள் பற்றியும் மோடி பேசி இருக்க வேண்டும்.

ஆனால் மோடி, மெழுகுவர்த்தி, விளக்கு பற்றியும் அறிவித்துள்ளார். மரணங்களை உங்கள் நாடகம் வென்றுவிடுமா?” இவ்வாறு ஜிக்னேஷ் மேவானி கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Comments are closed.