மே 4 முதல் 18ஆம் தேதி வரை நாடு தழுவிய மூன்றாம் கட்ட ஊரடங்கு துவங்கியுள்ள நிலையில் இரண்டாம் கட்ட நிவாரண தொகுப்பை மத்திய பாஜக அரசு அறிவிக்க வேண்டும் என்று மாநில அரசுகளின் கோரிக்கையை வைத்துள்ளன.
ஊரடங்கால் தொழில்துறை முடங்கியதன் காரணாமாக லட்சக்கணக்கான மக்கள் பட்டினியின் தவித்துள்ளனர். குறு, சிறு, நடுத்தர தொழில்கள் தகர்ந்துள்ளன. தொழிலாளர்களும் சிறுதொழில் முனைவோரும் அடிப்படை தேவைகளுக்காக கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த கஷ்டங்களை எதிர்கொள்ளும் வகையில் பொருத்தமான பொருளாதார தொகுப்பு திட்டம் தேவை என எதிர்கட்சிகளும் தொழில் துறையினரும் பெருளாதார வல்லுநர்களும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மத்திய பாஜக அரசு வாய் திறக்காமல் உள்ளது.
ஆண்டு வருமானம் 25 சதவிகிதம் குறைந்தால், நாட்டின் வறுமை நிலை 21.9 சதவிகிதத்திலிருந்து 46.3 சதவிகிதமாக உயரும் என சர்வதேச பொருளாதார உறவுகள் தொடர்பான இந்திய ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. வெளிமாநில தொழிலாளர்களில் 86 சதவிகிதம் பேருக்கு சம்பளம் கிடைப்பதில்லை.
ஜிஎஸ்டி இழப்பீட்டு நிலுவைத் தொகை வழங்காமல் நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியிடம் கடன் பெற்று மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என மகாராஷ்டிரா அரசு அமைத்த நிபுணர் குழு கோரியது. கேரளா ஏற்கனவே இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மக்களுக்கு உதவ பாஜக அரசு தயாராக இல்லை என்பது இதன் மூலம் தெரிகிறது.