டெல்லி கலவரத்திற்கு பாஜக தலைவர்களின் விஷம பேச்சுக்களே காரணம் -உண்மை அறியும் குழு அறிக்கை

0

பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட CAA, NRC, NPR உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத சட்டங்களை, ஜனநாயக முறையில் எதிர்க்கும் வகையில் டெல்லியில் ஷாஹீன் பாக் போராட்டம் நடைபெற்றது. அதற்கு பாஜக தலைவர்கள் எதிர்ப்பு என்கின்ற பெயரில் மத கலவரத்தை தூண்டும் பேச்சுக்களை பேசிவந்தனர்.

பாஜகவின் உள்துறை அமைச்சர் அமித் ஷா ‘டெல்லி தேர்தலில் வாக்களிக்க உள்ள மக்கள் வாக்கு எந்திரத்தில் பட்டனை அழுத்தினால் அது ஷாஹீன் பாக் மக்களுக்கு பெரும் ஷாக் ஏற்பட வேண்டும் என்று பேசியதையும் உண்மை அறியும் குழு சுட்டி காட்டியுள்ளது.

மேலும் பாஜகவின் கபில் மிஷ்ரா வெளிப்படையாகவே வன்முறை தூண்டும் வகையில் பேசி வந்திருக்கிறார்.
வடகிழக்கு டெல்லியில் துவங்கிய கவலவரத்திற்கு பாஜக தலைவர்களுடைய விஷப்பேச்சுகள் வெளிப்படையாகவே மக்களை வன்முறைக்கு தூண்டியதாக அக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.

CAAக்கு எதிராக போராடும் மக்கள் மீது ஆதாரமற்ற சந்தேக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவர்களுக்கு எதிராக வன்முறையில் இறங்கும் வகையில் தூண்டியிருக்கின்றது. இவ்வாறு டெல்லி உண்மை அறியும் குழு தெரிவித்துள்ளது.

Comments are closed.