நிர்பயா வழக்கு: மரண தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள நாடகமாடிய குற்றவாளி

0

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும் கடந்த 1ஆம் தேதி தூக்கில் போடுவதற்கு டெல்லி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா, தனது தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி குடியர்சு தலைவருக்கு கருணை மனு அனுப்பினார். அதனை குடடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். இதை எதிர்த்து வினய் சர்மா, தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதற்கிடையே, குற்றவாளிகள் 4 பேரையும் மார்ச் 3ஆம் தேதி தூக்கிலிடும்படி தேதியை டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்நிலையில், குற்றவாளி வினய் சர்மா கடந்த 16ஆம் தேதி திகார் சிறைச்சாலையில் தன்னைத் தானே காயப்படுத்தி உள்ளார். அறையில் உள்ள சுவரில் தலையை மோதியதால் வினய்க்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரி கூறியுள்ளார்.

நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த மரண தண்டைனையிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக, தண்டனையை குறைக்கும்படி,  குடியரசு தலைவரருக்கு எழுதிருந்த கருணை மனு நிராகரிக்கப்பட்டது. தற்போது 13 நாட்கள் மீதமுள்ள நிலையில் புது முயற்சியாக தன்னைத்தானே தாக்கிக்கொண்டு நாடகமாடி வருகிறார் குற்றவாளி வினய் சர்மா.

Comments are closed.