பாஜக அரசின் வெறும் அறிவிப்புகளால் எந்த பலனுமில்லை -ரகுராம் ராஜன்

0

கொரோனா வைரஸ் தாக்குதலால் இந்திய எதிர்பார்க்காததைவிட பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரோனா ஊரடங்கிற்கு முன்னும் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. இந்நிலையில் இந்திய பொருளாதாரத்தை மீட்க ரூ. 20 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாக மோடி அறிவித்தார். மோடியின் அறிப்பைத் தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார திட்டங்கள் மற்றும் சீரமைப்பு தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டார்.

இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு வழங்குவது மட்டும் போதாது. வேலையும் வழங்கவேண்டும். பல ஆண்டுகளாக இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, நாட்டின் வளர்ச்சி மிகவும் மந்தமாகிவிட்டது. இதனை மீட்க அதிக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

குறிப்பாக பொருளாதார சரிவை சரி செய்யவேண்டும். பெரிய நிறுவனங்கள், வங்கிகள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும். அவர்கள் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் ஊக்கத்தொகை அளிக்கவேண்டும். அதுதான் உடனடி தேவை. அப்போதுதான் மீண்டு வர முடியும். வெறும் சீர்திருத்த அறிவிப்புகளால் எந்த பலனுமில்லை. பொருளாதாரத்தோடு மக்களை காப்பாற்றவேண்டும். இதை உணர்ந்து அரசு செயல்படவேண்டும். மேலும் அடுத்தக்கட்ட ஊக்கத்தொகையை அரசு வழங்காவிட்டால் பொருளாதாரம் மேலும் சரியும்.

இச்சூழலில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகம் பாதிப்படைந்துள்ளனர். அரசின் இலவச உணவு, தானியங்கள் அவர்களின் தேவையை போக்க போதுமானது அல்ல. அதாவது வெறும் தானியத்தை சாப்பிட்டால் போதாது. காய்கறி, பால், சமையல் எண்ணெய் வாங்கவேண்டும். அதனை வழங்காமல் பணம் வழங்கி என்ன பயன். மேலும் அவர்களுக்கு வேலையை உறுதி செய்யவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Comments are closed.