ஊரடங்கு தொடர்ந்து நீடித்தால் இந்தியா பேரழிவுக்கு செல்லும் -ரகுராம் ராஜன்

0

கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகள் குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியும், முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனும் வீடியோ நேர்காணலில் உரையாடினர்.

அப்போது ராகுல் காந்தி, ரகுராம் ராஜனிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து பேசிய ரகுராம் ராஜன், மக்களை முடக்கத்தில் வைத்திருப்பது எளிதானது. அது பொருளாதாரத்திற்கு நிலையான பாதையாக இருக்காது. தற்போது இந்திய நாட்டின் ஏழைமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்தற்கு 65,000 கோடி ரூபாய் தேவைப்படும்.

ஊரடங்கு காலத்தில் ஊரடங்கைத் தளத்துவதில் புத்திசாலிசத்தனமாக இருக்கவேண்டும்.

குறிப்பாக நீண்ட நாட்களுக்கு மக்களுக்கு உணவளிக்கும் திறன் இந்தியாவிற்கு இல்லாததால் நாம் ஊரடங்கு கட்டுபாடுகளை படிப்படியாக தளர்த்தவேண்டும். இதுபோன்று கட்டுபாடுகளை தளர்த்தும்போது, யாரேனும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்த வேண்டும்.

மேலும் கொரோனா தொற்றுக்கு பின்னர் மேற்கொள்ளவேண்டிய மீட்பு நடவடிக்கை குறித்து வல்லுநர்களிடம் ஆலோசனை பெறவேண்டும். எவ்வாறு பொருளாதாரத்தை நாம் ஒன்றாக பாதுகாக்கப்போகிறோம் என்பதை நாம் முடிவு செய்ய வேண்டும்.

இன்னும் 3வது அல்லது 4வது ஊரடங்கு கொண்டுவந்தால் பொருளாதாரம் பேரழிவுக்குச் செல்லும்.

மேற்கத்தியநாடுகளுடன் ஒப்பிடும் போது நிதி மற்றும் பணமதிப்பு நமக்கு அளவானது. ஆதலால், சிறந்த வழியில் பொருளாதாரத்தை நாம் எவ்வாறு மக்களுக்கு திறந்து விடப்போகிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.

Comments are closed.