பாஜக அரசின் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டம்

0

டெல்லி ஜந்தர் மந்தரில் நாடாளுமன்றம் முற்றுகை போராட்டதம் நடத்த விவசாயிகளுக்கு அனுமதி அனுமதி மறுக்கப்பட்டதால், டெல்லி எல்லையில் கடந்த இரண்டு நாட்களாக தண்ணீரை பீச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும் விவசாயிகளை கலைக்க முயற்சித்தனர்.

அதற்கெல்லாம் அஞ்சாமல் துணிவோடு விவசாயிகள் முன்னேறினர். பின்னர் பணிந்த டெல்லி காவல்துறை தற்போது அவர்களை வடக்கு டெல்லி புராரி பகுதியில், உள்ள நிரங்காரி மைதானத்தில் போராட்டத்தை தொடர அனுமதி வழங்கியுள்ளனர்.

இந்த சூழ்நிலையில், வரும் டிசம்பர் 3ஆம் தேதி மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார். விவசாயிகள் தங்களுக்கு எதிரான சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்கிற ஒற்றைக் கோரிக்கையுடன் போராட்டம் நடத்துவதாக தெரிவித்துள்ளனர். மேலும் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களைத் திரும்பப் பெறவில்லை என்றால் இந்த போராட்டம் காலவரையறையற்ற போராட்டமாக மாறும் என்று விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.

டெல்லி போராட்டத்தில் ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகளும் கலந்துகொள்ளப போவதாக தற்போது அறிவித்துள்ளனர். இதனால் வரும் நாட்களில் இந்தப் போராட்டம் மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.