உச்சநீதிமன்றம் அமைத்த குழு என்பது கார்ப்பரேட்டுகளுக்கும், பாஜக அரசின் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானவர்களே. இந்த குழு அரசின் சூழ்ச்சித் திட்டமே எனக்கூறி போராடும் விவசாயிகள் சங்கத் தலைவர்கள் குழுவை நிராகரித்தனர்.
வேளாண் சட்டங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்திடுமாறும், அதன் அறிக்கையின் மீது உத்தரவு பிறப்பிக்கும் வரை வேளாண் சட்டங்களை நிறுத்தி வைப்பதாகவும் செவ்வாய்க்கிழமையன்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கூறியதுடன் ஒரு இதற்கான குழுவையும் நியமித்தும் உத்தரவு பிறப்பித்தார்.
உச்ச நீதிமன்றம் அமைத்த குழுவில் இருப்போர், வேளாண் சட்டங்களுக்கும் மோடிக்கும் ஆதரவானவர்கள். அவர்கள் மூலம் எப்படி நீதி கிடைக்கும்..? என்று காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் இந்த பெயர்ப் பட்டியலை யார் அளித்தது? என தெரியவில்லை!” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.