எச்சரிக்கை விடுத்த பாஜகவுக்கு டிவிட்டர் நிறுவனம் பதிலடி

0

ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் பாஜக பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவது ஒன்றும் புதுகதை அல்ல. தற்போது அதே குற்றச்சாட்டை முன்வைத்து விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக ட்வீட் செய்பவர்களின் கணக்குகளை முடக்க ட்விட்டர் நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது பாஜக அரசு.

குடியரசுத் தினத்தன்று விவசாயிகளின் டிராக்டர் பேரணி வன்முறையாக தோற்றுவித்தது பாஜக. இதில் வன்முறையைத் தூண்டியவர்களின் கணக்குகளை நிரந்தரமாக முடக்க பாஜக அரசு ட்விட்டருக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் ட்விட்டர் நிறுவனம் 257 பயனர்களின் கணக்கைத் தற்காலிகமாக முடக்கி, சில தினங்களுக்குப் பின் பயன்படுத்த அனுமதியளித்தது.

இதனால் அதிருப்தியான மத்திய பாஜக அரசு, உடனே ஐடி அமைச்சகத்தின் சார்பில் ட்விட்டர் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது. அந்நோட்டீஸில், உத்தரவைக் கடைப்பிடிக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விட்டிருந்தது குறிப்பிட்டிருந்தது.

இதற்கு பதிலளித்த ட்விட்டர் செய்தித் தொடர்பாளர், “ட்விட்டர் நிறுவனத்தின் ஊழியர்களுடைய நலனுக்கே நாங்கள் முக்கியத்துவம் கொடுப்போம். தொடர்ந்து அரசுடன் இணைந்து பணியாற்ற தயாராகவே இருக்கிறோம். இதுகுறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் முறையான பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். அனைவரது கருத்துச் சுதந்திரத்தையும் நாங்கள் முழுவதுமாக மதிக்கிறோம்” என்றார்.

Comments are closed.