“கொரோனாவை குணப்படுத்திவிடலாம்: ஆனால் விளக்கேற்றிய முட்டாள்தனத்தை எப்படி குணப்படுத்த முடியும்” -ஹர்பஜன் சிங்

0

இந்தியாவில் கொரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

கொரோனாவிடம் பலத்தைக்காட்ட, ஏப்ரல் 5ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்களுக்கு வீட்டில் உள்ள மின் விளக்குகளை அணைத்துவிட்டு விளக்கு ஏற்றவும், டார்ச் லைட்டுகளை அடிக்கவும் மக்களிடம் பிரதமர் மோடி கூறியிருந்தார்.

அப்போது சில சங்பரிவார்கள் தெருக்களிலும், வீட்டின் மாடிகளிலும் தீபாவளி போன்று பட்டாசு வெடித்து கொண்டாடியும், வீதிகளில் தீப்பந்தத்தை ஏந்தியும் சென்றனர். ஜெய்ப்பூரில் உள்ள வீடு ஒன்றின் மாடியில் பட்டாசுகளை வெடித்துள்ளனர். இதனால் அங்கு தீவிபத்து நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ஹர்பஜன் சிங், தீப்ப்ற்றி எறியும் வீடியோவை தனது ட்விட்டரில் பகிர்ந்ததோடு, “ நம்மால் கொரோனாவை கூட சிகிச்சை மூலம் குணப்படுத்திவிட முடியும். ஆனால் இதுபோன்ற முட்டாள்தனத்திற்கு என்ன சிகிச்சை அளிப்பது?” எனப் பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/harbhajan_singh/status/1247041101023739904

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கான பொருளாதார தட்டுப்பாட்டை நீக்கும் வகையிலான திட்டங்களை அறிவிக்காமல் விளக்கேற்ற சொல்வதாலும், கைதட்ட சொல்வதாலும் கொரோனாவ தீர்க்க முடியாது என பலரும் மோடியின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Comments are closed.