ராகுல் குறித்து அவதூறு கருத்து: நிர்மலா சீதாராமன் மீது உரிமை மீறல் நோட்டீஸ்

0

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை அவதூறாக பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. பிரதாபன் உரிமை மீறல் நோட்டீஸை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் அளித்தார்.

அந்த நோட்டீஸில், “நாட்டின் அழிவுகாலத்தை பற்றி சிந்திக்கும் மனிதர் என்று நிர்மலா சீதாராமன் ராகுல் காந்தி மீது அவதூறு கூறியுள்ளார்.  மக்களவை உறுப்பினரான ராகுல் காந்திக்கு நாட்டை பிளவுபடுத்தும் குழுக்களுடன் தொடர்பு இருக்கிறது என ஆதாரமில்லாமல் பேசியுள்ளார். நாட்டை இழிவுபடுத்துகிறார் ராகுல் காந்தி எனப பேசியுள்ளார். இது சபையின் அப்பட்டமான உரிமை மீறலாகும். நாட்டின் அழிவுசக்தி ராகுல் காந்தி என எந்த அடிப்படையில் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டினார்.

இதுபோன்ற வார்த்தைகள், நாடாளுமன்றத்தின் உரிமை, பெருமை மீதான தாக்குதல். எதிர்ப்பு குரல்கள் எழுப்புவோரை பிளவுபடுத்தும் சக்தி, அழிவுசக்தி, தேசவிரோத சக்தி என பட்டம் கொடுப்பதை ஏற்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மக்களவைக்குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி  கூறுகையில், “நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் கூறிய கருத்துக்களை ராகுல் காந்திக்கு எதிரானது, எனவே நான் அதை கடுமையாக எதிர்க்கிறேன்.  இதுபோன்ற நாடாளுமன்றத்தில் அவர் ஈடுபடக்கூடாது” என்று தெரிவித்தார்

Comments are closed.